இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் – அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.
கொழும்பில் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளது.