மீண்டும் உகான் நகரில் திறக்கப்பட்ட பள்ளிகள்.!
மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீனாவில் கொரோனா முதலில் பரவியதாக கூறினாலும் தற்போது, அங்கு கொரோனா தாக்கம் குறைந்து சீனா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் கடந்த ஜனவரி மாதம் உகான் நகரம் முழுவதும் முடக்கப்பட்டது. இதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு பள்ளி வரும் மாணவர்களின் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்ன பள்ளிகளில் அனுமதிக்கப் படுகின்றன. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.