கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக, ரெம்டெசிவிர், லோபினாவிர் -ரிட்டோனாவிர், இன்டர்பெரான் பீடா 1 ஏ மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து நடந்த ஆய்வில், இவை அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்துகள் இல்லை என தெரிய வந்துள்ளது.
மேலும், ரெம்டெசிவிர் மருந்தை, ஆரம்பக்கட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முதல் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வரை அனைவருக்கும் கொடுத்து ஆய்வு செய்ததில், அவர்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் 30 நாடுகளில் இருந்து 11 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களில் 937 பேர் இந்தியர்கள். இதனையடுத்து, இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…