‘டெடி’ திரைப்படம் OTT – ல் ரிலீஸா.? இயக்குநரே கூறிய தகவல்.!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து முடித்துள்ள டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார்.
ஆர்யாவின் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மனைவியான சாயிஷா நடித்துள்ளார். இந்த படத்தை மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள முதல் படமாகும். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டெடி பொம்மையும் இவர்களுடன் இணைந்து நடிக்கும்படி படம் உருவாகியுள்ளது.
ஆர்யா மற்றும் சாயிஷாவின் முதலாமாண்டு திருமண விழாவில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்து இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், டெடி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இந்த படத்தின் வெளியீட்டிற்கான உரிமைகள் திரையரங்குகளுக்கு முன்பே விற்கப்பட்டதாகவும், டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025