நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் “சார்பட்டா பரம்பரை” ..!
ஆர்யா நடித்துள்ள ”சார்பட்டா பரம்பரை” திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ”சார்பட்டா பரம்பரை” இந்த படத்தில் துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது . அதற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக மாற்றினார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
A boxer by birth or destiny?
Bringing you the world of #sarpatta @PrimeVideoIN on July 22 ????
Thank you @beemji sir for this unforgettable experience #SarpattaParambaraiOnPrime
@Actorsanthosh @johnkokken1 @shabzkal @KalaiActor @actorjohnvijay @K9Studioz @Music_Santhosh pic.twitter.com/8MKe4uRvli— Arya (@arya_offl) July 8, 2021