விடுதலைக்கு எப்போது விடுதலை..? ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்.!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது.
இதையும் படியுங்களேன் – முதல் பாகமே வரல.! அதுக்குள்ள இரண்டாம் பாகத்திற்கு விதை போட்ட கௌதம் மேனன்…
இந்த படத்தின் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் கைப்பற்றியது. எனவே தமிழகத்தில் இந்த படம் அதிக திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.