4 மணிக்கு ரிலீஸ் ஆகுமா லியோ? நாளை உயர்நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை !
நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகின்ற 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவன தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏற்கனவே, ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.
லியோ சிறப்பு காட்சிகளுக்கு கட்டுப்பாடு
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு வித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்க முதல் காட்சியை தொடங்க வேண்டும் என அரசாணை வெளயிட்டது.
இந்நிலையில், காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லியோ
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.