கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே…! இசைப்புயலிடம் வேண்டுகோள் விடுத்த ரசிகர்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ட்வீட்டரில் ரசிகர் ஒருவர் இசைப்புயலிடம் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் தயாரித்து இசையமைக்கும் திரைப்படம் 99சாங்ஸ். இது இசையை மையமாக கொண்ட காதல் படமாகும். இதனை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதில் இஹான் பட், எடில்ஸி வர்காஸ், லிசா ரே, மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பரோட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மொத்தமாக 14பாடல்கள் உள்ளது. தமிழில் ஒரு சில பாடல்களை கார்க்கி மற்றும் தாமரை எழுதியதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திலிருந்து தேரி நாசார் என்ற பாடலின் இந்தி வெர்ஷன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர் களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை விரைவில் வெளியிட சொல்லி ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தேரி நாசார் பாடல் தமிழில் வர காத்திருக்கின்றேன் என்றும், இந்த பாடல் என்றால் எனக்கு பைத்தியம் என்றும் ஒருநாள் 50 முறைக்கு மேலாவது இந்த பாடலை கேட்பேன் என்றும், தமிழில் இந்த பாடலை கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ. ஆர். ரஹ்மான், தேரி நாசார் பாடலின் தமிழ் வெர்ஷனை பாடலாசிரியர் கபிலன் மிகவும் நன்றாக எழுதியுள்ளார் எனவும், இந்தி வெர்ஷனை விட தமிழ் வெர்ஷன் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். எனவே இந்த பாடலின் தமிழ் வெர்ஷன் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரசிகர்களை காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.
Thank you for your kind wishes ..EPI ..eagerly waiting for the release of Tamil and Telugu #99songs soundtrack albums. https://t.co/LyftceabyV
— A.R.Rahman (@arrahman) May 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)