உலகின் சிறந்த 20 விமானங்களின் பட்டியல் வெளியீடு.. முதலிடத்தை பிடித்த கத்தார் ஏர்வேஸ்!

Default Image

கத்தார் ஏர்வேஸ் 2021ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏர் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி, கொரோனா தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட கத்தார் ஏர்வேஸ், உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக திகழ்கிறது என்று விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலின் போது கத்தார் ஏர்வேஸ் தொடர்ந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்புக்கு பாராட்டிய ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் (AirlineRatings.com) உலகின் சிறந்த 20 விமானங்களின் வருடாந்திர பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

முதல் 20 இடங்களில் தங்களது விமான நிறுவனம் பெயர் பெற, விமான நிறுவனங்கள் ஏழு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை (seven star safety rating) அடைய வேண்டும் என்றும் பயணிகளின் வசதிக்காக புதுமையான யுத்திகளை நிரூபிக்க வேண்டும் எனவும் ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) முதலிடத்தை பிடித்துள்ளது. IATA என்ற பாதுகாப்பு தணிக்கை (IOSA) முடித்த முதல் கேரியர் இதுவாகும்.  ஏர்லைன்ரேட்டிங்ஸ் மற்றும் ஸ்கைட்ராக்ஸ் ஆகிய இரண்டாலும் கொரோனாவுக்கு முழுமையாக தணிக்கை செய்யப்பட்டு கத்தார் ஏர்வேஸை தேர்வு செய்துள்ளது.

கத்தார் ஏர்வேஸுக்கு சிறந்த வணிகம், சிறந்த கேட்டரிங் மற்றும் சிறந்த மத்திய கிழக்கு விமான சேவை ஆகியவைகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக கத்தார் ஏர்வேஸ் தரம் மற்றும் சிறப்பாக இருந்து வருகிறது. புதிய பயணிகள் மற்றும் புதிய அதிநவீன விமான மாதிரிகள் மூலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்று ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி தாமஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த 20 விமானங்களின் பட்டியல் இங்கே :

கத்தார் ஏர்வேஸ், ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், குவாண்டாஸ், எமிரேட்ஸ், கேத்தே பசிபிக், விர்ஜின் அட்லாண்டிக், யுனைடெட் ஏர்லைன்ஸ், ஈ.வி.ஏ ஏர், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா, ஏ.என்.ஏ, ஃபின்னைர், ஜப்பான் ஏர் லைன்ஸ், கே.எல்.எம், ஹவாய் ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ், விர்ஜின் ஆஸ்திரேலியா, டெல்டா ஏர் லைன்ஸ், எட்டிஹாட் ஏர்வேஸ் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸின் குழு தலைமை நிர்வாகி கூறுகையில், விமானத் துறையால் இதுவரை கண்டிராத சில இருண்ட நாட்களைக் கண்டதாகவும், ஆனால் தோஹாவை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. எனவே, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸை தேர்வு செய்தற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்