சூப்பர் ஸ்டாரின் “அண்ணாத்த” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தினை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தினை விரைவில் முடித்து கொடுத்த பின்னரே அரசியலில் களமிறங்குவேன் என்று கூறியிருந்தார்.அந்த வகையில் அரசியலில் குதித்தால் ரஜினி படங்களில் நடிப்பது சந்தேகம் தான் . அப்படியெனில் அண்ணாத்த திரைப்படம் கடைசி படமாக இருக்க கூடுமோ என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு படத்தினை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதற்கான பணிகளில் படக்குழுவினர் மும்மரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.