ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.?
ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார் இவரது நடிப்பில் ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது.
இதில், ராஜவம்சம் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கேவி கதிர்வேலு இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஒரு குடும்ப பொழுதுபோக்கு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜயகுமார், சதீஷ், யோகி பாபு, ராதா ரவி, தம்பி ராமையா, சிங்கம் புலி, ரேகா, நிரோஷா மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜவம்சம் திரைப்படம் வரும் அக்டோபர் 1- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜவம்சம் திரைப்படம் வரும் அக்டோபர் 14, 2021 அன்று திரையரங்குகளில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.