மன்மத லீலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்.
படத்திலிருந்து வெளியான க்லிம்பஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
It’s “A” Venkat Prabhu quickie!!! #manmadhaleelaiFromApril1st worldwide!! pic.twitter.com/bRZYhfH1PX
— venkat prabhu (@vp_offl) March 11, 2022
இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் படத்திற்காக காத்துள்ளனர். விரைவில் இசையமைப்பாளர் பிரேம் ஜி இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.