‘இரண்டாம் குத்து’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Default Image

இரண்டாம் குத்து படத்தை தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இரட்டு அறையில் முரட்டு குத்து’. படு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் செய்தது . இந்த படத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் . அதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது .

அதன்படி ‘இரண்டாம் குத்து” என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பல விமர்சனங்களையும் , சர்ச்சையையும் உருவாக்கியது . இயக்குனர் பாரதிராஜா உட்பட பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . முதல் பாகத்தின் இயக்குநரான சந்தோஷ் ஜெயகுமார் , டேனியல் , நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து சந்தோஷ் ஜெயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது , இரண்டாம் குத்து படத்திற்கு சென்சார் கிடைக்கவில்லை என்று கூறியவர்களுக்கு தெரிவிப்பதற்காக இரண்டாம் குத்து படத்திற்கு சென்சார் வழங்கப்பட்டதற்கான சான்றிதழ் பகிரப்பட்டுள்ளது . அதனுடன் இரண்டாம் குத்து படத்தை தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்