தலைவி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..! படக்குழு அறிவிப்பு.!!
தலைவி திரைப்படம் தாமதமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் சில திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்து வருகின்றார்கள்.
அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ. எல். விஜய் படமாக இயக்க உள்ளார். தலைவி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் மற்றும் எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தாக்கம் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளத்தால் படத்தை தாமதமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் இதனால் தற்போது ரசிகர்கள் அனைவரும் சோகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து படக்குழு கூறியதாவது ” கொரோனா பரவல் காரணமாக தலைவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறது. கொரோனா பரவல் குறைந்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
#Thalaivi has always been about people first and in these times, people and their safety comes first.
Stay safe everyone!
We will be back soon! pic.twitter.com/hkqo1FdcKx— Zee Studios (@ZeeStudios_) April 9, 2021