இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….! ரீல்ஸ் பதிவிடும் நேரம் நீட்டிப்பு…!
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.ஏனெனில், இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மேலும்,பயனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாக விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்.
இதற்கிடையில்,இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு,வருத்தத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இதில்,ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடியாக மட்டுமே இருந்தது.
இந்நிலையில்,இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.அதாவது, இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரீல்ஸ் வீடியோ பதிவின் நேரம் 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடமாக நீட்டிக்கப்பட்டு உள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Reels. up to 60 secs. starting today. pic.twitter.com/pKWIqtoXU2
— Instagram (@instagram) July 27, 2021