ரீல்ஸ் 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக நீட்டிப்பு – புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டா!
ரீல்ஸில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம்.
இன்ஸ்டாகிராம் அதன் குறுகிய வடிவ வீடியோ வடிவமான ரீல்ஸ்களுக்கு அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக அதிகரித்து உள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ய ஏற்கனவே 60 வினாடிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் கால அளவை மேலும் 3 வினாடிகள் நீட்டித்து மொத்தமாக 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் புதிய அப்டேட்டையம் வழங்கியுள்ளது. அது என்னவென்றால், கூடுதலாக டெம்பிளேட்டுகள், ஸ்டிக்கர்கள், ஒலி அம்சங்கள் மற்றும் சொந்த ஆடியோவை ரீல்ஸில் பயன்படுத்தும் சேவையையும் இணைத்துள்ளது. இதனால் அதன் பயனாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த அம்சங்கள் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தங்கள் பார்வையாளர்களுடன் ஈடுபடவும், பார்வையாளர்களை ஈர்க்கவும், புதிய வழிகளில் தங்களை வெளிப்படுத்தவும் உதவும்.
தற்போது, சமூக ஊடக தளத்தின் வீடியோ 675.3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் அம்சமாகும். இதில், இதன் பொருள் Instagram- இன் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களில் கால் பகுதிக்கும் அதிகமானோர் இந்த செயல்பாட்டைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளது.