சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ‘மைக்செட்’ ஸ்ரீராம்.! இயக்குனர் யார் தெரியுமா.?
இயக்குனர் தாமரை செல்வன் இயக்கத்தில் யூடுயூப் பிரபலமான மைக்செட் ஸ்ரீராம் முதன் முதலாக நடித்து சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
யூடூபில் குறும்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஏராளம்.அதில் ஒருவர் தான் ஸ்ரீராம்.மைக்செட் என்ற யூடுயூப் சேனல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார். ‘ரூபம்’ எனும் படத்தினை இயக்கி வரும் தாமரை செல்வன் இந்த படத்தினை இயக்குகிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தினை புதிய தயாரிப்பு நிறுவனமான மாஸ் சினிமாஸ் தயாரிக்கிறது .திபு நினன் தோமஸ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் ஸ்ரீராமுடன் சாம் ஜோன்ஸ் நடிக்கவுள்ளார் .அவர் ஏமாளி ,லிசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களுடன் நடிகை ஆனந்தியும் நடிக்கவுள்ளார்.எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்த படத்தின் டைட்டிலை காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mic set @Sriram_micset’s Kollywood debut !!#MASCinemasProdNO1.
A Movie Based On Real Incident !!@actorsamjones @mascinemasoffl @anandhiactress @mpthamrae @msprabhudop @dhibuofficial @ibrktweets @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/WQqVjBeRYu
— Mas Cinemas (@mascinemasoffl) February 4, 2021