#Recordbreaking: மர்லின் மன்றோவின் ஓவியம் சாதனை..ரூ.1,500 கோடிக்கு விற்பனை!

Published by
பாலா கலியமூர்த்தி

மறைந்த மர்லின் மன்றோவின் ஓவியம் ரூ.1,500 கோடிக்கு விற்பனையாகி சாதனை.

கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1926-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்த மர்லின் மன்றோ, அமெரிக்க நடிகையும், பாடகியும், திரைப்பட இயக்குநரும் ஆவார். தனது ஆரம்ப வாழ்க்கையை அனாதை இல்லத்தில் கழித்த இவர், 16 வயதில் மனம் முடித்த மர்லின் மன்றோ, 1944ல் ஒரு மாடல் அழகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1947-ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு The Asphalt Jungle மற்றும் All About Eve போன்ற படங்கள் இவருக்குப் புகழை தேடிக் கொடுத்தன.

நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. பின்னர்  உடல் நலக் குறைபாடு காரணமாக ஆகஸ்ட் 5, 1962 அன்று மரணமடைந்தார். சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது, அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்து கால பகுதிக்கான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மர்லின் மன்றோவின் ஓவியம் ரூ.1,500 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதவாது பிரபல ஓவியர் ஆண்டி வார்ஹோல் வரைந்த மர்லின் மன்றோவின் ஓவியம் 195 மில்லியன் டாலருக்கு (ரூ.1,500 கோடிக்கு மேல்) ஏலம் விடப்பட்டது.

இது 20 ஆம் நூற்றாண்டின் கலைகளில் இதுவரை விற்கப்பட்டவற்றிலேயே மிகவும் விலை உயர்ந்தது என கூறப்படுகிறது. ‘ஷாட் சேஜ் ப்ளூ மர்லின்’ என்ற ஓவியம், 1964 ஆம் ஆண்டு வார்ஹோல் என்பவரால் வரையப்பட்டது. இதுவே அமெரிக்க கலைப் படைப்பிற்காக இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகையாகும். “தி செவன் இயர் இட்ச்” திரைப்படத்தில் மர்லின் மன்றோ தனது ஆடையுடன் மேலே பறக்கும் படத்தைப் போல, இந்த ஓவியம் வேடிக்கையானது அல்ல, அப்படி இருந்தும் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட்ட நான்கு நிமிடங்களுக்குள், நடிகையின்  “ஷாட் சேஜ் ப்ளூ மர்லின்” ஓவியம் நியூயார்க்கில் உள்ள ஒருவருக்கு சுமார் $195 மில்லியனுக்கு விற்கப்பட்டது. 40-இன்ச்-பை-40-இன்ச் ஓவியம், அதன் துடிப்பான வண்ணங்கள் மற்றும் கவர்ச்சியான முறையில் வரையப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

7 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

12 hours ago