13 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, சாதனை படைத்த கான்யே வெஸ்டின் காலணிகள்!

அமெரிக்க சொல்லிசை பாடகராகிய கான்யே வெஸ்ட் என்பவர் அணிந்த கால்கள் 13 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது.
நியூயார்க்கை மையமாகக்கொண்ட சோதேபிஸ் எனுமிடத்தில் காலணிகள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. அப்பொழுது அமெரிக்க சொல்லிசை பாடகரான கான்யே வெஸ்ட் அவர்கள் அணிந்த காலணிகளும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6,15,000 டாலருக்கு நிக் ஜோர்தான் என்பவரின் காலணிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. அதுவரை ஏலத்துக்கு விடப்பட்டிருந்த காலணிகளில் நிக்கின் காலணிகள் தான் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிக்கின் காலணிகள் படைத்த சாதனையை கான்யேவின் காலணிகள் முறியடித்துள்ளது. தற்பொழுது ஏலத்தில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்கப்பட்ட முதல் காலனி என்று அமெரிக்க சொல்லிசை பாடகர் கான்யே வெஸ்டின் காலணிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.8 மில்லியன் டாலருக்கு இந்த காலணிகள் விற்கப்பட்டுள்ளதாக சோதேபிஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிராமிய விருதுகளில் கான்யே இந்த காலணிகளை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025