இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்களை நினைவுகூரும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்தனர். இதற்கு தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவுத்தூண் பழைய மாதிரிலேயே அரசின் அங்கீகாரத்துடன் கட்டி முடிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா உறுதி அளித்துள்ளார். மேலும், துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…