பைடன் பதவியேற்க்கும் ஜனவரி 20-ல் ட்விட்டர் கொடுக்கும் அங்கீகாரம்!
ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் அதிபராக ட்விட்டர் ஜோ பைடன் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க உள்ளது.
விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால் வருகிற டிசம்பர் மாதத்தில் தான் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தனது தோல்வியை டிரம்ப் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் பதவி ஏற்கும் பொழுது நிச்சயம் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவரை தான் தலைவராக வைக்க முடியும். இந்நிலையில் பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் ஏற்கனவே ஜனாதிபதி டிரம்ப் அவர்களுக்கு வெள்ளை மாளிகையின் நிறுவனர் எனும் அங்கீகாரத்தை கொடுத்தது.
இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் அவர்கள் பதவியேற்கவுள்ள நிலையில், அவர்களிடமிருந்து POTUS அதாவது பிரசிடெண்ட் ஆஃப் தி யுனைடெட் ஸ்டேட்ஸ் எனும் அங்கீகாரம் அவர்களிடமிருந்து ஜோ பைடன் அவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. இது குறித்து தேசிய ஆவண காப்பகத்துடன் கலந்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 20ஆம் தேதி ஜனவரி மாதம் பைடன் பதவி ஏற்கும் நாளில் அவருக்கு வெள்ளை மாளிகையின் நிறுவனர் எனும் அங்கீகாரத்தையும் ட்விட்டர் சார்பில் கொடுத்து கௌரவிக்கப்பட்ட உள்ளது.