பண்டிகை காலங்களில் 6.3 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்த ரியல்மி!
இந்தாண்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் ரியல்மி நிறுவனம், 6.3 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து, புதிய மைல்கல் படைத்தது.
தொடர்ச்சியாக குறைந்த பட்ஜேட்டில் டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் நிறுவனம், ரியல்மி. இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர். அதற்கு காரணம், குறைந்த விலையில் அதிக ஸ்பெக்ஸ்-ஐ கொடுப்பது. அதிலும் பண்டிகை கால விற்பனையில் குறைந்த விலையில் கிடைத்ததால், அந்நிறுவனம் புதிய மைக்கல் எட்டியது.
அந்தவகையில் இந்த பண்டிகை கால விற்பனையில் அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டிபோட்டு சலுகைகளை அறிவித்தனர். இதில் ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, பல சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் விற்பனையான ரியல்மி சாதனங்கள் குறித் தகவல்களை அந்நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
அதன்படி ரியல்மி நிறுவனம், 6.3 மில்லியன் (63 லட்ச) ரியல்மி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டைவிட 20% அதிகமாகும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரியல்மி ஸ்மார்ட் டிவி-கள், 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடியோ சாதனங்கள் இந்த பண்டிகை தின விற்பனையில் மட்டும் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் புதிய மைல்கல் ஆகும்.
As World’s Fastest Growing and India’s No.1 Quality Smartphone brand. We sold more than 6.3 Million Smartphone Units during the #realmeFestiveDays increasing by 20%+ YoY basis.
Thank you for the love and support, we will continue to provide best tech-trendsetting products. pic.twitter.com/dcGmxpxfWo— realme (@realmemobiles) November 18, 2020