அப்படியா! டெஸ்லா பின்னடைவா? அமேசான் தலைமை முன்னிலையா? 230 பில்லியன் டாலர்கள் இழப்பு
டெஸ்லாவின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் மார்ச் 8 திங்கள் கிழமையான இன்று 27 பில்லியன் டாலர்களை இழக்க நேர்ந்துள்ளார்.ஏனெனில் வாகன தயாரிப்பாளர்களின் பங்கு மதிப்புகள் தொழில்நுட்ப பங்கு மதிப்புகளின் விற்பனையின் காரணமாக சரிந்ததால் அவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 157 பில்லியனாக குறைந்துள்ளதனால் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸை விட 20 பில்லியன் டாலர் குறைந்து பின்னிலையில் உள்ளார் என்றும்,அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இதனால் டெஸ்லாவின் சந்தை மதிப்பு கடந்த சில வாரங்களில் 230 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.