சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை கூறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டு கண் கலங்கும் சோனு சூட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரீயல் ஹீரோவாக உள்ளார் நடிகர் சோனு சூட் . இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகிறது. தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், சமீபத்தில் கூட மகள்களை வைத்து ஏர் உழும் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தும், ஊரடங்கால் வேலையிழந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது வேலை வாங்கி கொடுத்தும் உதவினார் .
மேலும் 3 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சோனி டிவியில் ஒளிபரப்பாகும் பாலிவுட் நிகழ்ச்சியில் சோனு சூட் கலந்து கொண்டுள்ளார்.விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் உதவிப் பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் சோனு சூட்டிற்கு நன்றியை தெரிவிக்க, அதனை பார்த்த சோனு சூட் கண் கலங்கி நிற்கும் உணர்ச்சிப் பூர்வமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…