#BREAKING: பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் – ரஷ்ய அதிபர்..!
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்ப தயார் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது. இதனால், உக்ரைனை சார்ந்த ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார்.இந்நிலையில், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தைக்கு தயார் கூறியிருந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்ப தயார் என ரஷ்ய அதிபர் க்ரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்-இல் உக்ரைன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று க்ரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.