சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தினை ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.சமீபத்தில் இந்த படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் ஒரு பாடலை பாடியுள்ளதுடன்,இந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளதாகவும் அரண்மனை 3 படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் அரண்மனை 3 படமானது எப்போது மிரட்ட வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதாவது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 திரைப்படமானது வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.விரைவில் அரண்மனை 3 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…