மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தர தயார் -அமைச்சர் கடம்பூர் ராஜு.!

Default Image

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் தர தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக முதல் திரையரங்குகளில் தான் வெளியாகும் ,அதாவது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தினை தியேட்டரில் வெளியிட உள்ளதாகவும் ,அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் மாஸ்டர் படக்குழுவினர் தெரிவித்தனர் .

மேலும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 13-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.அப்போது திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது .கொரோனா அச்சம் காரணமாக 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டும் தியேட்டரில் கூட்டம் இல்லை .எனவே மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் போது 50% பார்வையாளர்களுக்கு பதிலாக 75% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே மாஸ்டர் படக்குழுவினர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.அவர் கூறியதாவது ,பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி தர கோரி வேண்டுகோள் விடுத்தால் அரசு பரிசீலனை செய்து அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்