அதிபர் பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா அறிவிப்பு

Default Image

இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி, பொதுமக்கள் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரதமர் பதவி விலக மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது.

இதன்பின் போராட்ட களத்தில் வன்முறைகள் வெடித்தன. இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன்பின்னரும் கொழும்புவில் போராட்டம், கலவரமாக மாறியது. போராட்ட களத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியாக தகவல் வெளியாகியிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளில் தீ வைக்கப்பட்டதாகவும், காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியாகவும் பரபரப்பாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள், முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவ தொடங்கிய நிலையில், ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால் இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்றும் இலங்கைக்கு மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park