முன்பதிவுக்கு தயாரா? பட்டையை கிளப்பும் சாம்சங்… ஜனவரி 17ல் புதிய மாடல் அறிமுகம்!

Samsung Galaxy S24 series

2024 பொங்கல் ரேஸில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய சீரியஸை களமிறங்குகிறது. ஐபோன், ஒன்பிளஸ், ஐக்யூ, விவோ உட்பட இதுவரை வெளியான அனைத்து பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதாவது, சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் தனது சமீபத்திய முதன்மை சாதனங்களை Galaxy Unpacked 2024 நிகழ்வில் வெளியிடத் தயாராகி வருகிறது.

அந்தவகையில், ஜனவரி 17-ம் தேதி கலிபோர்னியாவில் நடைபெறும் (Galaxy Unpacked 2024) நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (‘கேலக்ஸி AI’ அம்சங்களுடன்) அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி எஸ்24, சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதி வெளிப்பாட்டிற்கு அதிக நேரம் இல்லை என்றாலும், சாம்சங் ஏற்கனவே இந்தியாவில் கேலக்ஸி எஸ்24 சீரிஸிற்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஆர்வமுள்ள சாம்சங் ரசிகர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான samsung.com/in/unpacked/ சமீபத்திய ஃபிளாக்ஷிப்பை முன்பதிவு செய்யலாம். மேலும், Galaxy VIPPASS ஐ வெறும் ரூ.1,999க்கு வாங்குவதன் மூலம் சமீபத்திய ஃபிளாக்ஷிப்பை முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 17 அல்லது அதற்குப் பிறகு கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு பாஸ் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் தள்ளுபடி விலைகள் போன்ற கூடுதல் சலுகைகளை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் அதன் புதிய கேலக்ஸி எஸ் 24 சீரியஸின் அம்சங்களை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரியஸ் அம்சங்கள்:

Galaxy S24 6.2-இன்ச் டிஸ்பிளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் S24+ 6.7-இன்ச் டிஸ்ப்ளே வரை இருக்கும் என்றும் டாப்-ஆஃப்-லைன் S24 அல்ட்ரா 6.8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இருக்கும். அதிவேக அனுபவத்தை கொடுக்கும் வகையில், 120Hz refresh rate இருக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரியஸில் (Qualcomm Snapdragon 8 Gen 3) அல்லது (Exynos 2400 சிப்செட்) இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பயனர்களுக்கு, Galaxy S24 சீரியஸில் Exynos சிப்செட் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கேமராவைப் பொறுத்தவரை, ஒரு தனித்துவமான அம்சமாக உள்ளன, வழக்கமான மற்றும் S24+ மாடல்கள் இரண்டு 50-மெகாபிக்சல் கேமராக்களை கொண்டிருக்கும். தற்போது, இந்த சீரியசில் உயர்தர படங்களைப் பிடிக்கும் மற்றும் ஈர்க்கக்கூடிய 8K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாக கேமராக்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேட்டரி பொறுத்தவரை, Galaxy S24 சீரியஸ் பயனர்கள் தங்கள் அன்றாட தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்ய முடியும். அதன்படி, S24 ஆனது 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், S24+ 4,900mAh பேட்டரியும் மற்றும் S24 Ultra ஆனது 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி/1டிபி மெமரி கொண்டு அறிமுகமாகும்.

அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரியஸ் தொடர்பான அம்சங்கள் மற்றும் விலைகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்