‘பேச்சுவார்த்தைக்கு தயார்’ – ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன்..!
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது. அங்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அச்சம் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.