கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரவையை வைத்து அசத்தலான பலகாரம் ரெடி..!

Default Image

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பொதுவாகவே ரவாலட்டு என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் நமது வீடுகளில் பண்டிகை நாட்கள் என்றாலே பலகாரம் இல்லாத பண்டிகை இராது. அதன்படி இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை :

  • வறுத்த ரவை – ஒரு கப்
  • சர்க்கரை – முக்கால் கப்
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
  • காய்ச்சிய பால் – அரை கப்
  • நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு – 10
  • பாதாம் பருப்பு – 5
  • உலர் திராட்சை – 10

செய்முறை

முதலில் ரவா லட்டு செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடு ஏற வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்ஸியில் சர்க்கரையை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முந்திரி பாதாம் பருப்பு போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏலக்காய் தூளை தயார் நிலையில் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயின் தோல் பகுதியை நீக்கி, வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை மட்டும் துருவித் எடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவிய தேங்காயை வெறும் வாணலியில் லேசாக 2 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து நான் ஸ்டிக் பான் அல்லது கனமான வாணலியை வைத்து நெய் ஊற்றி வறுத்து அரைத்த ரவை சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு உதிரியாக கிளறி கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் வறுத்த தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொண்டு, பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சி ஆறிய பாலை ஊற்றி லேசாக கிண்டிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு இதே சூட்டுடன் லேசாக கை பொறுக்கும் அளவிற்கு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்