தல – தளபதி இருவருக்கும் வெறித்தனமான கதை ரெடி- என்.ராஜசேகர்..!

Default Image

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் சம்மதம் தெரிவித்தால் அதற்கான கதை ஒன்றை வைத்துள்ளேன் என்று இயக்குனர் என்.ராஜசேகர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து சாதனை படைத்ததுவிடும். அஜித் விஜய் இருவர்வரும் நண்பர்களாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டுதான் வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அதைபோல் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க வைப்பதற்காக பல இயக்குனர்கள் கதை ரெடி செய்து கூறிவருகிறார்கள். அந்த வகையில் மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரான என்.ராஜசேகர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் களத்தில் சந்திப்போம் படம் மாதிரி அஜித் விஜய் இருவர்களையும் சேர்த்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு ” நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் இதற்காக சம்மதம் தெரிவித்தால் கண்டிப்பாக நடக்கும். அதற்கான கதை ஒன்றை வைத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக இயக்குவேன்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi