வெப்சீரிஸி மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார் பிரியாமணி இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பிரியாமணி. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் வீர தமிழச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அதனையடுத்து 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
அதனையடுத்து அண்மையில் தான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். ஆம் இந்தியில் மைதான் என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி, ஏற்கனவே தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதீத் என்ற உணர்வுமிக்க வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.
இறந்து போனதாக கூறப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவர் 10 வருடங்கள் கழித்து மீண்டும் மனைவி, மகளுடன் இணைந்து புதிய வாழ்க்கை வாழ வருகிறார். இவர் இறந்ததாக கூறப்பட்டதற்கு காரணம் என்ன, அப்போது அவரது குடும்பத்தின் நிலை என்ன இது தான் கதை. இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…