மீண்டும் உருவாக உள்ளதா கமலின் மருதநாயகம்.! ஆனால் ஹீரோ.!

Default Image

தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மூத்த நடிகர்களில் ஒருவர். தற்போது இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவரது இயக்கத்தில் இவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் மருதநாயகம். இந்த படத்தின் துவக்க விழா கூட இங்கிலாந்து ராணியான எலிசபெத் முன்னிலையில் வைத்து நடைபெற்றது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு  பாதியில் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் கமல் மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொண்ட லைவில், கமலிடம் மருதநாயகம் படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கமல் கூறியதாவது, மருதநாயகம் படத்தை புத்தகமாக கூட உடனே வெளியிடலாம், ஆனால் படமாக வெளியிட காசு தேவைப்படுகிறது. பணம் இருந்தால் மருதநாயகம் உருவாக்கப்படும்.

அது மட்டுமின்றி, நான் எழுதிய மருதநாயகம் கதையில் அவருக்கு 40வயது, எனவே அந்த கதாபாத்திரத்தில் இப்போது  எனக்கு நடிக்க இயலாது. அதனால் வேறு நடிகரை தான் நடிக்க வைக்க வேண்டும், இல்லாவிட்டால் கதையே மாற்றி தான் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்