சீனா நிதியிலா? ராஜீவ் அறக்கட்டளை??? ராகுலுக்கு பாஜக நறுக்!

Default Image

காங்கிரளின் சி  ராஜிவ் அறக்கட்டளைக்கு தற்போது வரை  சீனா நிதி அளித்து வருவதாக  பா.ஜக பகிரங்க  குற்றம்சாட்டி உள்ளது.

லடாக் எல்லையில், இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, பா.ஜக.,வும், காங்கிரசும் உள்நாட்டில் வார்த்தை போரில் ஈடுபட்டதை நாடே பார்த்தது. லடாக் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மீதும், பிரதமர் தும், காங்கிரஸ் எம்.பியும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான  ராகுல் காந்தி, தனது  ‘டுவிட்டர் பக்கத்தில்’ தினமும் இது குறித்து குற்றம் சுமத்தி வருகிறார். ராகுலின் ட்விட்டுக்கு, பா.ஜக., சார்பில், பதில் அளிக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு உள்ளே புகைந்து கொண்டிருக்க இதில் மேலும் பற்றவைப்பது போல  மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத்  கூறிய கருத்து அமைத்துள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கடந்த, 2017ல், டோக்லாமில், இந்திய – சீன படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட தருணம்.ஆனால் அப்போது இங்கு டில்லியில் இந்தியாவிற்கான சீன துாதரை, ராகுல் காந்தி  ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது.காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.அது பற்றி, எதுவும் தெரிவிக்காமல், அக்கட்சி மவுனம் சாதித்து வருவதாகவும் தெரிவித்த அவர்  காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார்.

இக்கட்டளையின்  உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, சிதம்பரம் என உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த அறக்கட்டளைக்கு 2005 – 06ம் ஆண்டில் சீன துாதரகம் நிதி அளித்துள்ளது.இது குறித்து  2005 – 06ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில், ராஜிவ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

சீனாவிடமிருந்து நிதியுதவி பெறுவது தான், காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தமா? இந்த நிதியுதவியால் தான், ராகுல், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ள ரவிசங்கர் பிரசாத் இது குறித்து  காங்கிரஸ்  நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்