அடுத்த ஆபத்து..!கொரோனா 3 ஆம் அலை பரவல் தொடங்கியது- பேராசிரியர் எச்சரிக்கை..!

Default Image

பிரிட்டனில் கொரோனா 3 ஆம் அலை பரவல் தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது.

இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.எனினும்,கொரோனா வைரஸின் இரண்டாம் அலையிலிருந்து முழுமையாக மீளமுடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில்,கொரோனா 3 ஆம் அலையானது பரவத் தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கழைக்கழகத்தில் ரவி குப்தா பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இவர் பிரிட்டன் அரசின் புதிய மற்றும் சுவாசம் தொடர்பான வைரஸ் அச்சுறுத்தல் குறித்த ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

கொரோனா 3 ஆம் அலை குறித்து ரவி குப்தா கூறுகையில்,”முன்னதாக, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிந்தாலும்,பி1617 என்ற உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

ஏனெனில்,கடந்த 5 நாட்களாக இந்த புதிய வகை கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் இந்த புதிய வைரஸ் பரவல் குறைவாக இருந்தாலும்,நாட்கள் செல்ல செல்ல பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.எனவே பிரிட்டனில் ஊரடங்கை தளர்த்த வேண்டாம்”,என்று அந்நாட்டு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்