கியூபா அதிபர் பதவியில் இருந்து விலகிய ராவுல் காஸ்ட்ரோ…! புதிய தலைவர் இவர்தானா…?
கட்சித் தலைவர் என்ற முறையில் கியூபாவின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட திருப்தியுடன், இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு பதவி விலக முடிவு செய்துள்ளேன்.
1965-ல், பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரானார். இவருக்கு பிடல் காஸ்ட்ரோவுக்கு அவரது சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ பக்கபலமாக விளங்கிய நிலையில், பிடல் காஸ்ட்ரோ நோய்வாய்ப்பட்ட பின் 2008-ஆம் ஆண்டு ராவுல் காஸ்ட்ரோவிடம் கியூபா அதிபர் பதவியை ஒப்படைத்தார். மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கியூபாவில், ஒரு கட்சி ஆட்சி முறை நிலவி வருகிறது. அங்கு தலைநகர் ஹவானாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய ராவுல் காஸ்ட்ரோ, ‘கட்சித் தலைவர் என்ற முறையில் கியூபாவின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட திருப்தியுடன், இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு பதவி விலக முடிவு செய்துள்ளேன்.’ என தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சு கியூபாவின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில், இவர் புதிய தலைவர் யார் என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், 2018 முதல் கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த டயஸ்-கேனல் இப்போது கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.