சுகமான வாழ்வுத்தரும் சூர்ய வழிபாடு..இன்று ரத சப்தமி.. விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி அறியலாம்.!

Default Image
  • வாழ்க்கையில் வளங்களை அருளும் ரத சப்தமி இன்று நடைபெறுகிறது.
  • விரதம் இருந்து எவ்வாறு அனுஷ்டிக்கலாம் என்று காண்போம்

இன்று ரதசப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விழா நாயகனாக திகழ்பவர் சூரிய பகவான் அவரை விழிமேல் வழிவைத்து வழிபட வேண்டிய நாளாகும்.ஆரோக்கியத்தை அருள்பவர் கண் முதலான நோய்களை விரட்டுபவர்,ஞானம் அளிப்பவர் அவரை நினைத்து வழிபட்டால் நினைத்தை நிறைவேற்று தருவார் ஆதித்யன்.அவரை விரத மூலமாக  வழிபாடு நடத்தினால் இன்னும் சிறப்பு என் கிறார் .அப்படி விரத வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமாக நம்முடைய பாவங்கள்அனைத்தும் நீங்கி நல்ல நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை. அவ்வாறு நாம் பாவங்களை எல்லாம் தீர்க்கக்கூடிய ஓர் அற்புத விரதம் இந்த ரத சப்தமி விரதம் ஆகும்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:

ரத சப்தமி நாளான இன்று நதி அல்லது சமுத்திரக் கரைகளில் நீராடுவது நல்லது.இதுவும் இல்லை என்றால் அதிகாலையில் எழுந்து குளித்து விட வேண்டும்.அவ்வாறு வீடுகளில் நீராடும் போது ஏழு எருக்க இலைகளை அட்சதையோடு சேர்த்துத் தலையில் அதன்பின்னர் நீராட வேண்டும். இவ்வாறு செய்தவதன் மூலம் பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு தேகத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும்

அத்தகைய பூஜையான இன்று  பூஜை அறையில் தேர்க்கோலம் இடுவது வழக்கம். தேர்க்கோலமிட்டு அலங்கரித்து அருளக்கூடிய சூரிய பகவனுக்குக்கு  சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து விநியோகித்தால் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

விரதம் மேற்கொள்ளும் போது ஆதித்ய ஹிருதயம் பாடி சூரியனை வழிபட்டால் மிகுந்த சிறப்பு வாய்ந்தது.மேலும் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம் சூரியன் என்பதால் சூரியனை வழிபடுவதன்மூலமாக வேண்டியதை நிறைவேற்றி வைப்பார். அவரின்அருளையும் ஆரோக்கியத்தையும் சுக வாழ்வையும் பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்