அமெரிக்க திரைப்பட விழாவில் விருதுகளை குவிக்கும் ராட்சசன்!

Default Image

விஷ்ணு விஷால் நடிப்பில் சென்றாண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தை ராம் குமார் இயக்கி இருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களும் வெகுவாவாக கவர்ந்தது.
பள்ளி பெண்களை கொள்ளும் சைக்கோ கொலைகாரன். அவரை பிடிக்க போராடும் போலீஸ் என திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் இருந்து படத்தினை பார்க்கும் வகையில் த்ரில்லாக படமாகியிருந்தார் இயக்குனர். இப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கவில்லை என தமிழ் சினிமா விமர்சர்கள் வருத்தம் கொண்டனர்.
தற்போது இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் ஏஞ்செல்ஸ் திரைப்பட விருது விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த திரில்லர் திரைப்படம், சிறந்த பின்னணி இசை கோர்ப்பு, சிறந்த நடிகர் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்