மதுவுக்கு அடிமையான ராட்சசன் பட நடிகர்!

- மதுவுக்கு அடிமையான விஷணுவிஷால்.
- நேர்மறையாக சிந்தித்து வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி மீண்டு வாருங்கள்.
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வென்னிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தனது மனைவி, குழந்தை பிரிவால் மன அழுத்தம் ஏற்பட்டதால் மதுவுக்கு அடிமையானேன். இதனால் நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். உடல் எடையும் கூடியது.
பிறகு மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன், பயிற்சியாளரை வைத்து உடற்பயிற்சி செய்தேன். தற்போது மீண்டும் வலுவாக மாறி இருக்கிறேன். என்னை போல் நிறைய பேர் இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்வது நேர்மறையாக சிந்தித்து வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி மீண்டு வாருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025