ராட்சசன் 2 தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ஒரு நல்ல வசூல் சாதனையையும் செய்தது மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு சிறந்த வெற்றிப் படமாக இது திகழ்ந்தது.
ராட்சசன் 2 ஆம் பாகத்தை இயக்குனர் ராம்குமார் நடிகர் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்கியிருந்தார். ஹீரோவாக பெல்லம்கொண்டா சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழில் உருவாவதற்கு முன்பே ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும், இதில் இதில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…