ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிய எலி..!-தலைதெறிக்க ஓடிய உறுப்பினர்கள்..!வீடியோ உள்ளே

ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வந்த எலியால் உறுப்பினர்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக வாக்களிக்க காத்திருந்தனர். அப்போது பாராளுமன்றத்திற்குள் எலி ஒன்று நுழைந்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது.
இதனால் எப்போதும் அமைதியாக நடக்கும் பாரமன்றத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் அவையை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். பின்னர் மீண்டும் அவை துவங்கப்பட்டு உறுப்பினர் ஒருவர் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கால்களுக்கு இடையே எலி சடுகுடு விளையாடியதால், அங்குள்ள உறுப்பினர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
இந்த காட்சிகள் அங்குள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. மேலும், ஒருவழியாக அந்த எலியை அவைத்துணைத்தலைவர் ஜுவான் மரின் பிடித்து அப்புறப்படுத்தியுள்ளார். இதன் பின்னரே அவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A Rat interrupts #parliament session in #Spain. pic.twitter.com/vk3CSM8Iik
— Sandeep Panwar (@tweet_sandeep) July 22, 2021