இன்றைய (09.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ
ஸ்ரீவிகாரி வருடம் தை மாதம் 26 ம் தேதி(09.02.2020), ஞாயிறு, பிரதமை திதியும் உடைய இந்த சுபதினத்தில் ஆயில்யம் மாலை 08.52 வரையும் பௌர்னமி நாளுமான சித்த யோகம் மாலை 08.52 வரை பின்பு மரணயோகம். இராகு காலம் 04.30 – 06.00 வரையிலும், குளிகை 03.00 – 04.00 வரையிலும், எமகண்டம் 12.00 – 01.30 வரையிலும் நல்ல நேரம் காலை 7.30 – 08.30 வரையிலும், பின் மாலை 3.30 – 04.30 வரையிலும் உள்ளது. இன்றைய நாள் கீழ்நோக்கு நாளாகும். இன்று, மிதுன ராசியில் ராகுவும், கடக ராசியில் சந்திரனும், விருச்சிக ராசியில் செவ்வாயும், தனுசு ராசியில் குரு, சந்திரன், கேதுவும், மகர ராசியில் சூரியனும், கும்ப ராசியில் புதனும், மீன ராசியில் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் ஆகும். இன்றைய கிரக நிலவரங்களின் அடிப்படையில் இராசிப்பலன்களை காணலாம்.
மேஷம் : நட்பால் நன்மைகள் அதிகளவில் ஏற்படும் நாள். வரவு மனதிற்கு திருப்தி தரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளவீர்கள். வாகனம் வாங்ககூடிய யோகம் உண்டு. உத்யோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள்.ஆலய வழிபாடு ஆனந்தத்தை வரவழைக்கும்.
ரிஷபம் : பொருளாதார ரீதியாக இருந்து வந்த தடைஅகலும் நாள்.முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழுவீர்கள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரின் உதவியால் நினைத்த காரியம் விரைவாக நடைபெறும்.
மிதுனம் : இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். எதிரிகள் விலகி செல்வார்கள் வாயிற்கதவை தட்டும் வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவீகள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்வு உள்ளது.
கடகம் : குடும்பத்தில் கூடுதல் அக்கறை காட்டி மகிழ்வீர்கள். பணத் தேவைகள் கடைசி நிமிடத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலங்காரப் பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம் : எதிர்பார்த்த வரவு வந்து சேரும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கொடுக்கல் வாங்கல்களால் கவனம் தேவை. வெளிவட்டார பழக்க வழக்கமானது மேலும் விரிவடையும். பெற்றோர் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கன்னி : காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி ஒன்று வந்து சேரும். கடமையில் கட்டுக்கோப்பாக செயல்படுவீர்கள். வெளிநாட்டிற்கு பயணம் செய்ய தீட்டிய திட்டமானது நிறைவேற வாய்ப்புள்ளது.மனதிற்கு ஏற்ற வைகையில் வருமானம் உயரும்.
துலாம் : இதுவரையில் தொல்லை கொடுத்துவந்த தொந்தரவுக்காரர்கள் எல்லையைவிட்டு விலகிச் செல்லும் நாள். எதிர்பார்த்தபடியே தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்து மகிழ்ச்சி காண்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சிக்கு வெற்றிக்கிடைக்கும்.
விருச்சிகம் : தொலைப்பேசி வழியில் இருந்து வரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் .நல்ல வாய்ப்புகள் எல்லாம் இல்லம் தேடி வரும்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டு மகிழ்வீர்கள். தற்போது சற்று பொருளாதாரத்தில் உங்களின் நிலை உயரும்.
தனுசு : நினைத்ததை முடிக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள்.ஆலய வழிபாட்டின் மூலமாக நினைத்த காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள்.கொடுக்கல் வாங்கலில் கவனத்தோடு செயல்படுவது நல்லது.தொழில் பங்குதாரர்களிடம் சற்று விட்டுக் கொடுத்துச்செல்வது நல்ல பயனைத் தரும்.
மகரம் : உங்களின் கனவுகள் நனவாக ஆகக்கூடிய அற்புதமான காலக்கட்டம் உறவினர்களின் வருகை உண்டு.நம்பிக்கை மிக்க நண்பர்களால் வாழ்வில் தன்னபிக்கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய இனிய சம்பவம் எல்லாம் நடைபெறும்.
கும்பம் : இறைவழிபாடு இதயத்திற்கு மகிழ்ச்சி தரும். ஆலங்களுக்கு எல்லாம் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்ஆரோக்யத்தில் அக்கறை தேவை. கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். உத்யோக மாற்ற சிந்தனை உருவாகும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகையானது மாறும்.
மீனம் : பொது வாழ்வில் புகழ் கூடுகின்ற நாள். அடுத்தவர் நலனுக்காக எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்வீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் எண்ணம் உருவாகும்.