இன்றைய (10.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வோம்.
மேஷம் :
இன்று செல்வ வளம் பெருகும்.கொடுத்த பணம் குறிப்பிட்டப்படி வந்து சேரும். இன்று கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள்.சுபக்காரிய பேச்சுக்கள் நல்ல முடிவாகும்.முருகன் வழிப்பாடு மேலும் நன்மைகளையெல்லாம் தரும்.
ரிஷபம்
இன்று உங்களின் வளர்ச்சிக் கூடும் நாள்,அடுத்தவர் நலனில் அக்கறை காட்சுவீர்கள்.மேலும் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும்.மேலும் குழப்பங்கள் அகலும் ஒரு நல்ல நாள்.
மிதுனம்
உங்களின் கனவுகள் எல்லாம் தற்போது நிறைவேறும் நல்ல நாள்.இன்று தங்களின் தீடிர் பயணத்தால் வழக்கமான பணிகள் தேக்கம் ஏற்படும்.உங்களின் மனக்குறைகளை யாரிடமும் சொல்ல வேண்டாம். கார்த்திகேயன் வழிபாடு கவலைகளை மாற்றும்
கடகம்
இன்று உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள். வங்கி சேமிப்பு மேலொங்கும் நாள்.தொலைத்தூர பயணங்கள் செல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சிம்மம்
உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் எல்லாம் தற்போது தோள் கொடுத்து உதவுவார்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் நல்ல நாள்.வள்ளல்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள்.அதிகாரிகள் உங்கள் இடத்தில் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.மேலும் வெற்றி எல்லாம் கிடைக்க வேலனை வழிபட வேண்டிய நாள்.
கன்னி
இன்று தங்களின் மனக்குழப்பங்கள் எல்லாம் அகலும் ஒரு நல்ல நாள்.உங்களை குறைச்சொல்லிய அத்துனைப்பேரும் இன்று பாராட்டுவார்கள்.பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவர்.மொத்தத்தில் மன நிம்மதி காணும் இனிய நாள்.
துலாம்
இன்று தங்களின் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சணை ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் தங்கள் எடுத்த காரியத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும் நல்ல நாள்.
விருச்சகம்
இன்று முக்கியப் புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.மேலும் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருப்பார்கள்.தொழில் வளம் கருதி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் எண்ணம் மேலொங்கும் நாள்.
தனுசு
இன்று உத்யோகம் தொடர்பாக மேற்கொண்ட முயற்ச்சிக்கு அனுகூலம் கிடைக்கும் ஒரு நாள்.மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.மேலும் கூட்டு முயற்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.மேலும் முன்னேற்றங்களைப் பெற முருக பெருமானை வழிபடவேண்டிய ஒரு நாளாகும்.
மகரம்
நெடுநாட்களாக தங்களை துன்படுத்தி வந்த துன்பங்கள் எல்லாம் தூளாகும் ஒரு நல்ல நாள்.குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உங்களின் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வாரகள்.மேலும் நன்மைகள் கிடைக்க முருகன் வழிபாடு கைக் கொடுக்கும்.
கும்பம்
இன்று உங்கள் வாயிற்கதவை வாய்ப்புகள் தட்டும் ஒரு அற்புதமான நல்ல நாள்.உங்களின் செல்வாக்கு உயரும்.தங்களின் வாகனம் வாங்கும் முயற்சி கைக் கூடும். அயல்நாட்டு விவகாரங்கள் அனுகூலமான தகவல்களைத் தரும்.
மீனம்
இன்று உங்களை தேடி வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நல்ல நாள்.நெடுநாட்களாக நீடித்து வந்த பஞ்சயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.