இன்றைய (23.03.2020)நாள்!எப்படி இருக்கு!?? ராசிபலன் இதோ!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (23.03.2020)திங்கள் கிழமை விகாரி வருடம், பங்குனி 10-ம் தேதி நல்ல நேரம் காலை 6.30 – 7.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 7.30 -9.00 எம கண்டம் 10.30 – 12.00 குளிகை 1.30 – 3.00 திதி சதுர்த்தி நட்சத்திரம் பூரட்டாதி  சந்திராஷ்டமம் மகம்,ஆயில்யம் யோகம்: சித்த / மரண யோகம் சூலம்: கிழக்கு  பரிகாரம்: தயிர் விசேஷம்: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் பவனி.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: இன்று எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் செல்வ சேர்க்கை ஏற்படும். எதிலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள்.பயணத்தின் போது கவனம் தேவை.
.
ரிஷபம்: தொழிலில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.  பண உதவி கிடைக்கும்.போட்டிகள் குறையும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நிலவி வந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
மிதுனம்: பிரச்சனைகள் தீரும். தேங்கி கிடந்த பணிகளை  விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும்,மனதில் அமைதி ஏற்படும்.
கடகம் சலிப்பு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும்.
சிம்மம்: இன்று மனம் மகிழும் சம்பவம் நடக்கும். எடுக்கும் முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும். பணவரவு கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை தக்க பலன் அளிக்கும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி:  எதிர்ப்புகள் விலகி வெற்றி கிடைக்கும் நாள். காரிய அனுகூலம் உண்டாகும். அனுபவ அறிவினால் திறம்பட செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள்.மனகவலை தோன்றிய வண்ணம் இருக்கும்.விடுபட ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

துலாம்:  இன்று மிக துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாக்குவாதங்களை தவிர்த்து காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். 

விருச்சிகம்: உதவி என்று கேட்பவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். தொழிலில் கவனத்தோடு செயல்படுவீர்கள்.எடுக்கும் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.

தனுசு:  ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து இன்று முடிவெடுப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. 

மகரம்: மனதில் நிம்மதி இன்று  உண்டாகும் . பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். 

கும்பம்:  மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி தைரியம் உண்டாகும்.தெளிவு பிறக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும். பிரச்சனைகள் அகலும்.பெற்றோர் மீது பாசம் அதிகரிக்கும். 

மீனம்: திறமையாக பேசி காரியங்களை சாதித்து  காட்டும் நாள்.பயணங்களால் பலன் கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

40 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

1 hour ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

12 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

13 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

14 hours ago