இன்றைய(08.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Default Image

பஞ்சாங்கம்

இன்று (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், மாசி 25-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30   மாலை 3.00 – 4.00 ராகு காலம் 4.30 -6.00 எம கண்டம்12.00 – 1.30குளிகை 3.00 – 4.30 திதி சதுர்த்தசி நட்சத்திரம் மகம் சந்திராஷ்டமம் உத்திராடம் யோகம்: சித்த யோகம் சூலம்:மேற்கு  பரிகாரம்: வெல்லம் விசேஷம்: மாசிமகம்,ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்,காரமடை அரங்கநாத ரதோற்சவம் 

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

 
மேஷம்: பாதை புலப்படும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த வாக்குவாத பிரச்சணைகள் மறையும்.
 
ரிஷபம்: விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவர். தொல்லை தந்த எதிரிகள் இப்போது தோள் கொடுத்து உதவுவர். அன்பால் எதையும் வென்று விடுவீர்கள்.
 
மிதுனம்:  எண்ணியவை அவ்வாறே நடைபெறும் நாள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
 
கடகம்: குடும்ப பொறுப்புகள் சற்று கூடும் நாள். ஆலயத்தை நோக்கி அடி யெடுத்து வைப்பீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்கள் இன்று முழுவீச்சில் துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
 
சிம்மம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். வரவு மனத்திருப்தி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.பாக்கிகள் வசூலாகும்,அரோக்கியத்தில் அக்கறை தேவை.
 
கன்னி:  நட்பு மூலம் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். தொல்லை கொடுத்து வந்த  நோய் அகலும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்து வில்லங்கங்கள் அகலும்.
 

துலாம்: கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் அகலும். புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.  ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும். 

விருச்சிகம்: மாலைநேரத்தில் குடும்பத்துடன் குதூகலப் பயணம் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த பகை மாறும். 

தனுசு:  எதிரிகள்  உதிரியாகி விலகி செல்லும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். வாகன புதிய நண்பர்களின் அறிமுகம் பொருளாதார நிலையை உயர்த்தும்.

மகரம்: வனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்பு ணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர் கள் கூட பகைமை பாராட்டலாம்.

கும்பம்:  நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சினைகள் எல்லாம் இன்று நல்ல முடிவிற்கு வரும் . இடமாற்றம், ஊர்மாற்றம் எல்லாம் எதிர்பார்த்தபடியே அமையும். 

மீனம்: தடைகள் அகன்று செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் மாற்றுக் கருத்துடையோர்களின் மனம் மாறும். தொழில் போட்டிகள் அகலும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்