மேஷம் : வளர்ச்சிக்கு உதவியவகளை சந்தித்து உள்ளம் மகிழும் நாள்.புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். . குடும்பத்தில் ஏற்பட்டு வாக்குவாதங்கள் படிப்படியாக மறையும்.
ரிஷபம் : இனிய சம்பவமானது இல்லத்தில் நடைபெறுகின்ற நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உங்களை வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற விட்ட பணிகள் துரிதமாக முடியும். பொதுநலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம் : மனம் நினைக்கும் எண்ணங்கள் ஈடேறுகின்ற நாள். வியாபாரத்தில் இருந்து வந்தப் போட்டிகள் அகலும். அன்றாடம் செய்கின்ற பணிகள் சிறப்பாக நடைபெறும்.உற்ற நண்பர்கள் மனதிற்கு இனிய தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
கடகம் : குடும்ப பொறுப்புகள் ஒரு படி கூடுகின்ற நாள். ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதமாகிய காரியங்கள் எல்லாம் இன்று கட்சிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனம் தேவை.
சிம்மம் : நீண்ட நாளாக நினைத்து வந்த எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் உதவி தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
கன்னி : காலை நேரம் மிகவும் கலகலப்பாக அமைகின்ற வகையில் மகிழ்ச்சி காணுவீர்கள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இடம் வாங்குகின்ற முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் செல்வீர்கள். உறவினர் வருகை உண்டு.
துலாம் : வாகன யோகத்தால் வளங்கள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துத்தில் உள்ள வில்லங்கங்கள் அகலும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி செயல்பட்டதற்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம் : அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். அக்கம் பக்கத்து பகை மாறும். சிக்கல்களை செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு சமாளித்து விடுவீர்கள்.
தனுசு : தன்னம்பிக்கையானது பலமடங்கு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அதிகஅக்கறை காட்டி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்கள் தொழில் வளர்ச்சி உதவும்.
மகரம் : இறைவழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள் எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் வாக்குவாதங்களை எல்லாம் தவிர்ப்பது நல்லது.அன்றாட பணிகளை சுறுசுறுப்போடு செய்து முடிப்பீர்கள்.
கும்பம் : நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.மன நிம்மதிக்காக சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்று நடைபெற்ற பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடமாற்றம் மற்றும் ஊர்மாற்றம் போன்றவைகள் எதிர்பார்த்தபடி அமைய வாய்ப்புள்ளது.
மீனம் : இதுவரை முட்டுக்கட்டையாக இருந்து வந்த தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்திகரமாக தரும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. மாற்றுக் கருத்து கொண்டோர் மனம் மாறுவர். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அகலும்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…