உலக நாடுகளை அச்சுறுத்த ஆயுதக்குவியல் – புதின் விளக்கம் !!
உலக நாடுகளை அச்சுறுத்த தாங்கள் ஆயுதங்களை குவிக்கவில்லை, என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டின் ராணுவத்துறை சார்பில் மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய அவர், அதிநவீன ரக ஆயுதங்களால் ரஷ்ய ராணுவம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன், சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படும் சராசரி அளவை மிஞ்சும் எனவும் தெரிவித்தார்.
தற்போது குவிக்கப்படும் ஆயுதங்கள், சர்வதேச அளவில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை காக்கவே தவிர, பிற நாடுகளை அச்சுறுத்த அல்ல எனவும் அதிபர் புதின் பேசினார்.
சிரியாவின் உள்நாட்டு போருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிரிய நாட்டு அரசுக்கு ரஷ்ய அரசு ஆயுதங்களை வழங்கிவருகிறது. இதனால் சர்வதேச தலைவர்கள் பலர் ரஷ்யாவுக்கு கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு