இன்றைய நாள் (13.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்வீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். நல்ல நேரம் இருக்கும் நாள்.
மிதுனம் : உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. அது நல்ல பலனைத் தரும். முன்னேற்றம் உள்ள நாள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம் : இயலாதோருக்கு உதவி செய்தால் இன்று நீங்கள் மன நிம்மதியுடன் இருக்கலாம். இன்றைய நாளை பிறருக்கு உதவுவதில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி : உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் சமநிலை உணர்வோடு காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன தரும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
துலாம் : இன்று நீங்கள் ஆற்றல் மிகுந்து காணப் படுவீர்கள். உங்களுக்கு பயனுள்ள வகையில் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். சௌகரியமான நாள்.
விருச்சிகம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். செயல்களில் எதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ளுங்கள். சுயமுயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும்.
மகரம் : இன்றைய பணிகளை நீங்கள் எளிதாக முடித்து கொள்ளலாம். உங்களுக்கான வளர்ச்சி இன்று நிச்சயம் இருக்கும். அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இதனால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
கும்பம் : இன்றைய நாள் சீராக அமையும். மகிழ்ச்சியுடனும் மன திருப்தியுடனும் காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். அதனை நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மீனம் : இன்றைய நாள் சுமுகமாக செல்ல சில அசௌகரியங்களை நீங்கள் பொறுத்து கொள்ள வேண்டும். நம்பிக்கை இழக்க நேரிடலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள்.