கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதற்கு பின் வசூலில் பட்டைய கிளப்பிய கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்தார். அவ்வாறு அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் முன்னணி நடிகர்களோடு படங்களில் தற்போது ராஷ்மி நடித்து வருகிறார். இதனால் படம் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் அதனை பணமாக பெற்றுக்கொண்டு அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்று புகார் கூறப்படுகிறது.இந்த புகாரின் அடிப்படையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடகு மாவட்டத்தில் உள்ள பெங்களூரு வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை காலை 7.30 மணியில் இருந்து ராஷ்மிகா மந்தனா வீட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது.ஆனால் இச்சோதனையின் போது நடிகை ராஷ்மிகா வீட்டில் இருந்தாரா..?என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை இச்செய்தி நடிகை ராஷ்மிகாவின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…